பாதுகாப்பு செயலாளர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பு

செப்டம்பர் 04, 2023

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் தம்மிக்க குமார இன்று (செப். 04) பத்தரமுல்லையில் உள்ள பாதுகாப்பு அமைச்சில்  பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது புதிய உபவேந்தர் பதவியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் தெரிவித்த ஜெனரல் குணரத்ன புதிய உபவேந்தர் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிக உயரங்களை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

புகழ்பெற்ற கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக ரியர் அட்மிரல் குமார வெள்ளிக்கிழமை (செப். 01) கடமைகளைப் பொறுப்பேற்றார்.