2023 ஆம் ஆண்டில் படைவீரர்களுக்கு ரூபா 600 லட்சம் பெருமதியான
சலுகை வீட்டுக் கடன்
செப்டம்பர் 05, 2023
ரணவிரு சேவை அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட சலுகை வீட்டுக்கடன் திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்களில் பரந்து வாழும் 85 இராணுவ குடும்பங்களுக்கு 2023 ஆம் ஆண்டில் 600 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுக்கடன் வழங்கப்பட உள்ளது.
ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ், தனக்கென ஒரு சொந்த வீடு கட்ட முடியாத அல்லது தனது வீட்டை கட்டி முடிக்க முடியாக படைவீர்ரகளுக்கு உதவுமுகமாக இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்கமைய, இவ்வாண்டில் (2023) 72 இராணுவ குடும்பங்களுக்கு இதுவரை ரூபா. 44,700,000.00 பெருமதியான வீட்டுக் கடன்களை வழங்குவதற்கு ரணவிரு சேவா அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திட்டப் பொறுப்பதிகாரியும் வீடமைப்புப் பிரிவிற்குப் பொறுப்பான வேலைத்திட்ட உத்தியோகத்தருமான திருமதி. சம்பிகா குணசேகர அவர்களின் நெரிப்படுத்தலின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மாவட்ட அதிகாரிகள் மற்றும் மாகாண பிரதிப் பணிப்பாளர்களின் பரிந்துரைக்கமைய ரணவிரு சேவா அதிகார சபையின் வீட்டுக்கடன் திட்டப் பிரிவினால் இந்த சலுகை கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.