இராணுவ சேவா வனிதா பிரிவு தனக்கென முகநூல் பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிசம்பர் 16, 2020

இலங்கை இராணுவத்தின் சேவா வனிதா பிரிவு தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான நிகழ்வு ஜயவர்தனபுரயிலுள்ள, இராணுவ தலைமையகத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவா வனிதா அலுவலகத்தில் நேற்று பிற்பகல் (டிச. 15 ) நடைபெற்றது.

இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் தலைமையில் நடைபெற்ற முகநூல் பக்கத்தின் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வில்,சேவா வனிதா குழுவின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இராணுவ சேவா வனிதா பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு நலன்புரி திட்டங்கள் தொடர்பில் தனது வாசகர்களை  https://www.facebook.com/SriLankaArmySVU என்ற இந்த முகநூல் பக்கத்தின் ஊடாக அறிவித்துவதே நோக்கமாகும் என இராணுவம் தெரிவிக்கிறது.