--> -->

பாகிஸ்தானின் நீண்டகால உறவுகளை பாதுகாப்பு செயலாளர் நினைவு கூர்ந்தார்

செப்டம்பர் 08, 2023
  • பாகிஸ்தானின் 58வது பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் நேற்று (செப். 07) இடம்பெற்ற பாகிஸ்தானின் 58வது பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் பாரூக் வரவேற்புரை ஆற்றினார்.

ஆண்டு தோறும் கொண்டாடப்படும் பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தினமானது, இந்த வருடத்துடன் 58ஆண்டுகள் பூர்த்தியாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

மேற்படி தினத்தினை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், வலுவான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும் பாகிஸ்தானுக்கு பாதுகாப்புச் செயலாளர் நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒற்றுமை, பாக்கிஸ்தான் இராணுவத்தில் உள்ள சிறந்த இராணுவத்தினர் மற்றும் அவர்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் இதன்போது நினைவுகூர்ந்த பாதுகாப்பு செயலாளர், இராணுவ ஆதரவு மற்றும் இலங்கை முப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி உதவிகள் உட்பட அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படை தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலார்கள் மற்றும் இராணுவ இணைப்பு அதிகாரி, உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் இலங்கை முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.