கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

செப்டம்பர் 11, 2023

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (செப். 11) கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.

அமைச்சர் தென்னக்கோன் வருகை தந்த புதிய உபவேந்தரை அன்புடன் வரவேற்றதுடன், முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

புதிய உபவேந்தர் பதவியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் தெரிவித்த அமைச்சர் தென்னக்கோன் அவரின் தலைமைத்துவத்தின் கீழ் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது உபவேந்தர் இராஜாங்க அமைச்சருக்கு நினைவுச்சின்னமொன்ரையும் வழங்கினார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார செப்டம்பர் 01 ஆம் திகதி கடமையேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.