--> -->

லெபனானில் நடைபெற்ற பதக்க அணிவகுப்பில் இலங்கை படையின்
பங்களிப்பிற்கு பாராட்டு

செப்டம்பர் 12, 2023

லெபனானில் உள்ள லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் 14 இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவிற்கான சம்பிரதாய பதக்கம் வழங்கும் அணிவகுப்பு புதன்கிழமை (செப். 6) நகோராவில் உள்ள லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையக வளாகத்தில் உள்ள கிரீன்ஹில் சோடிர்மேன் முகாமில் நடைப்பெற்றது.

இந் நிகழ்வில் இராணுவ தளபதியினை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களுடன் பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் கேணல் வெளிநாட்டு நடவடிக்கைகள் கேணல் பீபீசீ பெரேரா பீஎஸ்சீ ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் சார்பாக, லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை நடவடிக்கை தளபதி மேஜர் ஜெனரல் அரோல்டோ லாசரோ சான்ஸ் மற்றும் லெபனான் சிரியாவுக்கான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தூதுவர் மேதகு திரு கபில சுசந்த ஜயவீர ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டனர்.

இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் தளபதி லெப்டினன் கேணல் டிபிஎல்டி கலுஅக்கல அவர்கள் நிகழ்விற்கு அழைப்பாளர்களை வரவேற்றார். குழு படங்களை பெற்றுக்கொண்டதினை தொடர்ந்து அழைப்பாளர்கள் இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை பதிவிட்டனர்.

இந்த லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை பதக்கம், லெபனானில் அமைதியைப் பேணுவதற்காக வழங்கப்பட்ட சேவைகளை அங்கீகரிப்பதற்காகவும், அனைத்துத் தேவைகளையும் முழுமையாகப் பூர்த்திசெய்து, லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் இராணுவ உறுப்பினராக தேவையான காலத்தை நிறைவு செய்ததற்காகவும் வழங்கப்படுகிறது.

நன்றி - www.army.lk