பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்

செப்டம்பர் 13, 2023

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உட்பட நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக இன்று (13) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

 “G77 குழு + சீனா” அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

"தற்போதைய வளர்ச்சி சவால்கள்: அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு" என்ற தொனிப்பொருளில் கியூபாவின் ஹவானாவில் செப்டம்பர் 14ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.