தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளை பாதுகாப்புச் செயலாளர் மீளாய்வு செய்தார்

டிசம்பர் 16, 2020

தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தலைமையில் மீளாய்வு செய்யப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சில் இன்று (டிச.16) நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜனாதிபதி செயலாணியின் உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமை தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பாதுகாப்புச் செயலாளருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

இந்த தூபியை பார்வையிட வருகை தரும் யாத்திரிகளுக்கான ஓய்விடம் அமைத்தல், அன்னதான மண்டபம் புனரமைத்தல், சலபால என்ற புனித கல்நடை பாதையை மறுசீரமைத்தல் மற்றும் தூபியை புனர்நிர்மாணம் செய்வதற்கு தேவையான செங்கற்களை உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்னவினால் இந்த கூட்டத்தின் போது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஆராயப்பட்டது.

பண்டைய கால காட்சியை உருவாக்குதல், அழகுப்படுத்தல் மற்றும் மரம் நடுதல் தொடர்பாகவும் ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது.   

இலங்கை இராணுவம், சிவில் பாதுகாப்பு திணைக்களம், மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய வற்றினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.

தீகவாபி விகாரையின் பிரதம விகாராதிபதி, தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் ரியர் அட்மிரல் (ஓய்வு) உதேனி சேரசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, நில அளவையாளர் ஏ எல் எஸ் சி பேரேரா, காணி ஆணையாளர் நாயகம் சந்திரா ஹேரத், ஜனாதிபதி செயலணியின் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க, தெரன ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.