சீரற்ற காலநிலை மேலும் தொடரலாம்
செப்டம்பர் 15, 2023- தேசிய கட்டிட ஆராயிச்சி நிறுவனம் பல மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடர வாய்ப்புள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (செப். 15) காலை வெளியிடப்பட்ட முன்னறிவிப்புகளின்படி, தென், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 - 45 கிலோ மீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக, கேகாலை மாவட்டத்தில் வரகாபொல மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் குறிவிட்ட, இரத்தினபுரி மற்றும் எஹலியகொட ஆகிய ஆகிய பிரதேசங்களுக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நிலை 1 (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.