காத்தான்குடியில் இராணுவத்தினரால் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு

செப்டம்பர் 15, 2023

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப்பொருள் மற்றும் அதன் பாவனையால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு செயலமர்வு காத்தான்குடியில் இடம்பெற்றது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களின் சம்மேளனம், மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் இணைந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, மத தலைவர்கள் மற்றும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினருடன் கலந்தாலோசித்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்ததாக இரனுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

காத்தான்குடி மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.