பாதுகாப்பு செயலாளருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

செப்டம்பர் 19, 2023

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேராவினால் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கு இன்று (செப். 19) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோதே பொப்பி மலர் பாதுகாப்பு செயலாளருக்கு அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன மற்றும் இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோரிக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றது.

'பொப்பி மலர் தினம்' முதலாம் உலகப் போரின் போது உயிர் தியாகம் செய்த ஆயுதப் படை வீரர்களை நினைவுகூரும் வகையில் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.