வரையறுக்கப்பட்ட ஸ்லிம் (SLIM) மருந்துகள் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தினால் 500 முகக் கவசங்கள் நன்கொடையாக அன்பளிப்பு

செப்டம்பர் 22, 2023

வரையறுக்கப்பட்ட ஸ்லிம் (SLIM) மருந்துகள் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தினால் மூடுபனி எதிர்ப்பு முகக் கவசங்கள் அடங்கிய பொதி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முகக் கவசங்கள் அடங்கிய பொதியானது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களிடம் நேற்று (செப்டம்பர் 21) பாதுகாப்பு அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது ஸ்லிம் (SLIM) மருந்துகள் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தின் அதிகாரிகளிடமிருந்து WEEPRO முத்திரையிடப்பட்ட 500 பல்நோக்கு முகக் கவசங்களை பாதுகாப்புச் செயலாளர் பெற்றுக்கொண்டார்.

குறித்த நிறுவனத் தலைவரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப ஆரம்பிக்கப்பட்ட கூட்டு சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை ஸ்லிம் (SLIM) நிறுவனத்தினால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நன்கொடை தொகுதியானது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார அவர்களிடம் கையளிக்கப்பட்டது.