சேவைக் காலம் முடிந்து செல்லும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
செப்டம்பர் 25, 2023கொழும்பில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயதில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கொமொடோர் முஹம்மட் ஷபிஉல் பாரி இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (செப். 25) இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சிக்கு வருகைதந்த பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், பின்னர் முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
இலங்கையில் தான் கடமையாற்றிய காலத்தில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஒத்துழைப்புக்காக கொமொடோர் முஹம்மட் ஷபிஉல் பாதுகாப்பு செயலாளருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
மேலும், பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்த அவர்கள், அத்தகைய நல்லெண்ணம் மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகரின் சேவையைப் பாராட்டிய ஜெனரல் குணரத்ன, அவரது பதவிக் காலத்தில் இலங்கைக்கு பங்களாதேஷ் வழங்கிய உதவிகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதரவும் கலந்து கொண்டார்.