துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் மற்றும் தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களின் பதிவு புதுப்பித்தல் -2024

செப்டம்பர் 28, 2023

2024 ஆம் ஆண்டிற்கான தனிநபர்கள்/நிறுவனங்களின் துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் 01 அக்டோபர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை மேற்கொள்ளப்படும். தேவையான விவரங்களை பாதுகாப்பு அமைச்சின் இணையதளமான www.defence.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2024 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் 31 டிசம்பர் 2023க்குப் பின் மேட்கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஆயுதங்கள் கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளின்படி செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

2024/2025 ஆம் ஆண்டிற்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களின் பதிவு புதுப்பித்தல் 01.10.2023 முதல் 31.12.2023 வரை மேற்கொள்ளப்படும். இக்காலக்கெடுவிற்குப் பின் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.