--> -->

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் இலங்கை இராணுவ வீராங்கனைக்கு வெள்ளி பதக்கம்

ஒக்டோபர் 04, 2023


சீனாவில் நடைபெற்ற ‘ஆசிய விளையாட்டுப் போட்டியில்’ ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையின் நடிஷா லேகம்கே புதிய இலங்கை சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தற்போது சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் '19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில்' ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 45 உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 12,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளதாக இராணுவ தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.