ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இராணுவ வீரர்களுக்கு வெண்கலப் பதக்கம்

ஒக்டோபர் 05, 2023

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சார்ஜென்ட் நதீஷா ராமநாயக்க அவர்கள் புதன்கிழமை (ஒக்டோபர் 4) பிற்பகல் 4 x 400 மீ அஞ்சல் ஓட்டத்தில் (பெண்கள்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஜயஷி உத்தரா, லக்ஷிமா மெண்டிஸ் மற்றும் தருஷி கருணாரத்ன ஆகியோர் இணைந்து சக ஓட்டப்பந்தய வீராங்கனைகளுடனான சவாலான போட்டியில் 3.30.88 நிமிடங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டர்.

இலங்கை இராணுவத்தின் பணிநிலை சார்ஜன்ட் கலிங்க குமாரகே, சார்ஜன்ட் அருணதர்ஷன, கோப்ரல் ராஜித ராஜகருணா மற்றும் லான்ஸ் பொம்படியர் பபாஷர நிகு ஆகியோர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 x 400 மீ அஞ்சல் ஓட்டத்தில் (ஆண்கள்) 3.02.55 நிமிடங்களில் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்று மற்றுமொரு இலங்கை சாதனையை படைத்துள்ளனர்.

நன்றி - www.army.lk