--> -->

அமைச்சக ஊழியர்களுக்கான மருத்துவ முகாம்

ஒக்டோபர் 05, 2023

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிச் சங்கம் அமைச்சின் ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்றை இன்று (அக் 05) ஏற்பாடு செய்துள்ளது. இந்த இரண்டு நாள் மருத்துவ முகாம் இன்று காலை அமைச்சு வளாகத்தில் ஆரம்பமானது.

மருத்துவ பரிசோதனைகள் கொத்தலாவ பல்கலைக்கழக வைத்தியசாலையின் மருத்துவ பணியாளர்கள் குழுவினால் வழங்கப்பட்டன.

அமைச்சு ஊழியர்களுக்கு முறையான மருத்துவச் சேவையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட இம்முகாமில் அதிகளவான அமைச்சு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவ முகாமின் தொடக்க நிகழ்வில் மேலதிக செயலாளர்கள் உட்பட பல மூத்த அமைச்சரவை அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.