அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்

ஒக்டோபர் 05, 2023

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரெமித்த பண்டார தென்னகோன் இன்று (ஒக்டோபர் 05) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) செயற்பாட்டு அறைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

அவ்விஜயத்தின் போது அவசரகால சூழ்நிலைகளின் போது எடுக்கப்படக்கூடிய நிவாரண நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இராஜாங்க அமைச்சர் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

மேலும், மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் தென்னகோன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துவதட்கும், அனர்த்த நிவாரண செயற்பாடுகளை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.