அதிகாரிகளின் உரிய நடவடிக்கையால் ஏற்படவிருந்த பேரிடர் தவிர்க்கப்பட்டது
ஒக்டோபர் 06, 2023மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ தியலபே கிராமத்தில் அமைந்துள்ள தென்னபிடஹேன மலை நேற்று (ஒக்டோபர் 05) மாலை 5 மணியளவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டது.
இம் மண்சரிவில் இதுவரை உயிர் சேதமோ அல்லது காணாமல் போன நபர்கள் தொடர்பில் எந்த தகவலும் பதிவாகவில்லை.
இச்சம்பவத்திற்கு முன்னதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் நேற்று காலை குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்து மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதியில் அமைந்திருந்த 6 வீடுகளின் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு கருதி நிரந்தரமாக வேறிடத்திற்கு வெளியேற்றப்பட்டதுடன் அப்பகுதியில் இருந்த மேலும் 3 வீட்டு குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரெமித்த பண்டார தென்னகோனின் ஆலோசனைக்மைய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளின் தலையீட்டினால் உயிர்சேதம் மற்றும் உடமைகளுக்கு சேதமேட்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் அல்லது அவசரநிலைகள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருகின்றனர்.