--> -->

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் புதிய மேற்பார்வைப்
பணிப்பாளர் நாயகமாக கேர்ணல் நளின் ஹேரத் பொறுப்பேற்பு

ஒக்டோபர் 06, 2023

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் புதிய மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகமாக தற்போது அதன் பதில் பணிப்பாளரான (ஆராய்ச்சி) கேர்ணல் நளின் ஹேரத் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, கேர்ணல் நளின் ஹேரத் 2023 ஒக்டோபர் 05ஆம் திகதி பத்தரமுல்ல, சுஹுருபாயவில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் அலுவலகத்தில் புதிய மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அத்துடன், கேர்ணல் ஹேரத் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளராகவும் மற்றும் ஊடகப் பேச்சாளராகவும் தற்போது கடமையாற்றிவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமது 28 வருட இராணுவ வாழ்க்கையில், கேர்ணல் ஹேரத் அவர்கள் இலங்கை இராணுவத்தின் பல உயர் பதிவிகளை வகித்துள்ளதுடன் பல நிருவாக ரீதியிலான சாதனைகளையும் ஏற்படுத்தியுள்ளார்.

கேர்ணல் ஹேரத் அவர்கள் சர்வதேச உறவுகள் தொடர்பில் ஒரு நிபுணத்துவம் உடையவராகவும், முன்னணி பன்னாட்டு மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான குழுக்களில் அவரது திறமைக்காகவும், ஐ.நா அமைதி காக்கும் பணிகளின் போது எதிர்கொள்ளும் சவாலான சூழல்களிலும் கூட, மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குவதற்காகவும் புகழ்பெற்ற ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஆவார்.

மேலும், கேர்ணல் ஹேரத் அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளரும், விரிவுரையாளரும் மற்றும் திறமையான எழுத்தாளரும் ஆவார். அவர் எழுதிய "Globe in a Nutshell" மற்றும் "Geological Alliances and Rivalries Set in Stone" ஆகிய இரண்டு புத்தகங்களும் மிகவும் வெற்றிகரமான முறையில் வெளியிடப்பட்ட புத்தகங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.