--> -->

கொள்ளுப்பிட்டி பஸ் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு பாதுகாப்பு செயலாளர் உடனடி விஜயம்

ஒக்டோபர் 06, 2023

கொழும்பிலிருந்து தெனியாயவிற்கு சென்றுக் கொண்டிருந்த பஸ் ஒன்றின் மீது கொள்ளுப்பிட்டியில் வைத்து ஒரு பாரிய மரம் விழுந்து விபத்துக்குள்ளானது.

மேற்படி விபத்து இடம்பெற்ற இடத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (06) காலை அவசர விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் முப்படை, தீயணைப்பு மற்றும் பொலிஸ் மீட்புக் குழுக்களுக்கு அவர்களின் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக பாதுகாப்புச் செயலாளர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.