--> -->

இந்து-பசிபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சரை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வரவேற்றார்

ஒக்டோபர் 10, 2023

இந்து-பசிபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் கௌரவ ஆன்-மேரி ட்ரெவல்யன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (அக். 10) இலங்கையை வந்தடைந்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்து-பசிபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் வரவேற்றார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு அன்ட்ரூ பேட்ரிக்கும் இராஜாங்க அமைச்சர் தென்னகோனுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நாளை (அக். 11) நடைபெறவுள்ள இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) 23வது அமைச்சர்கள் (COM) கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் ட்ரெவெலியன் இலங்கை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடைபெறும் இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் தலைமைத்துவத்திற்கான கூட்டம் 'பிராந்திய கட்டிடக்கலையை வலுப்படுத்துதல்: இந்தியப் பெருங்கடல் அடையாளத்தை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளில் நடத்தப்படுகிறது.

அத்துடன், இந்த சங்கத்தின் தற்போதைய தலைமைத்துவத்தை வகித்து வரும் பங்களாதேஷ் மக்கள் குடியரசு இரண்டு வருட பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு வருட காலப்பகுதிக்கான இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) தலைமைப் பொறுப்பை இலங்கையிடயம் உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளமை விசேட அம்சமாகும்.