11வது ‘காலி உரையாடல் 2023’ சர்வதேச கடல்சார் மாநாடு நாளை ஆரம்பம்
ஒக்டோபர் 11, 2023பாதுகாப்பு அமைச்சு மற்றும் Geopolitical Cartographer (GC) நிருவனம் இணைந்து இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள 11வது ‘காலி உரையாடல் 2023’ சர்வதேச கடல்சார் மாநாடு நாளை (அக். 12) காலியில் உள்ள ஜெட்விங் லைட்ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டு நாள் மாநாட்டின் தொடக்க விழா (அக். 12 - 13) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த ஆண்டு காலி உரையாடல் "இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புதிய ஒழுங்குமுறை "என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு 44 நாடுகள் மற்றும் 11 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு கடற்படை அழைப்பு விடுத்துள்ளது.
காலி உரையாடல் ஆனது கடல்சார் தொழில்துறையில் உள்ள பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர்களின் நிபுணத்துவம், திறன்கள் மற்றும் மூலோபாய அணுகுமுறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒன்றிணைந்து, நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கு மற்றும் தனிப்பட்ட கடல்சார் சவால்களை ஒத்துழைக்க ஒரு சிறந்த இடத்தை வழங்குகிறது.
மேலும், இம்மாநாட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.galledialogue.lk, என்ற இணையதளத்தின் மூலம் மாநாட்டை நேரடியாகப் பார்க்கும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்