11வது இந்திய மற்றும் இலங்கை கடற்படை கலந்துரையாடல் ஆரம்பம்
ஒக்டோபர் 18, 202311வது இலங்கை மற்றும் இந்திய கடற்படை 11வது கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (ஒக் 17) கொழும்பில் ஆரம்பமானது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை கடற்படை சார்பில், பணிப்பாளர் நாயகம் (பயிற்சி) ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்கவின் தலைமையிலான கடற்படை அதிகாரிகள் பங்குபற்றுகின்றனர். மேலும் இந்திய கடற்படை சார்பில், ரியர் அட்மிரல் நிர்பய் பப்னா தலைமையிலான கடற்படை அதிகாரிகள் பங்குபற்றுகின்றனர் என இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், ஒத்துழைப்பு மற்றும் இயங்குநிலையை வளர்ப்பது, பயிற்சி பரிமாற்றங்களை எளிதாக்குதல், அறிவு மற்றும் தகவல் பகிர்வு, ஹைட்ரோகிராஃபி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் கூட்டுப் பயிற்சிகளைத் திட்டமிடுதல் போன்ற தலைப்புகள் இக் கலந்துரையாடல்களின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மூன்று நாட்கள் இடம்பெறும் இந்த கலந்துரையாடல் நாளை (ஒக்.19) நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.