இந்திய கடற்படை 'ஐஎன்எஸ் ஐராவத்' கப்பல் கொழும்பு வருகை

ஒக்டோபர் 18, 2023

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் ஐராவத்' (INS Aravat) கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று (ஒக்.18) வந்தடைந்தது.

துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் சம்பிரதாயபூர்வாமாக வரவேற்பளிக்கப்பட்டது என கடற்படை ஊடக செய்திகள் தெரிவித்துள்ளது.

124.8 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 170 கடற்படை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், அதன் பணியாளர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பல பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர் என கடற்படை ஊடக செய்திகள் தெரிவித்துள்ளது.