2023 ஜோன் பீ கல் சாம்பியன்ஷிப் கிண்ணப் போட்டியில்
கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
ஒக்டோபர் 20, 2023
கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் கனிஷ்ட மாணவப் படைப்பிரிவு, ரன்டம்பேவில் நடைபெற்ற தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் 2023 அகில இலங்கை ஜோன் பீ கல் சாம்பியன்ஷிப்பில் (John B. Cull Challenge Trophy 2023) இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
மேலும், செப்டெம்பர் 9ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி நடைபெற்ற சம்பியன்ஷிப் போட்டியின் போது, குருநாகலிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பெண்கள் கனிஷ்ட மாணவப் படைப்பிரிவு, பெண்கள் பிரிவில் சிறந்த அணிநடை குழுவாக தெரிவு செய்யப்பட்டு நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.