இலங்கை இராணுவத் தளபதிக்கு பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் அணிவகுப்பு கெளரவ மரியாதை
ஒக்டோபர் 24, 2023பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் இப்திகார் ஹசன் சவுத்ரி அவர்களின் அழைப்பின் பேரில் தற்போது பாகிஸ்தான் காகுல் நகருக்கு வருகை தந்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் சனிக்கிழமை (ஒக்டோபர் 21) பகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியின் அணிவகுப்பு மரியாதையில் கெளரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, அதே பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் பல ஆண்டுகளுக்கு முன்பு இராணுவ கல்வியற் கல்லூரியின் தற்போதைய தளபதியுடன் பாடநெறித் தோழராக இருந்தார். லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அணிவகுப்பு மைதானத்தை வந்தடைந்ததும், பட்டம் பெற்ற பயிலிலவல் அதிகாரிகளால் மரியாதை செலுத்தி கௌரவிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியின் 148 வது நீண்ட நாள் பாடநெறி, 67 வது ஒருங்கிணைந்த பாடநெறி, 35 வது தொழில்நுட்ப பட்டதாரி பாடநெறி மற்றும் 22 வது பெண் பயிலிலவல் அதிகாரி பாடநெறி ஆகியவற்றின் விடுகை அணிவகுப்பு பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெற்ற இலங்கை இராணுவத்தின் இரண்டு பயிலிலவல் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இராணுவத் தளபதி இரண்டு இலங்கை பயிலிலவல் அதிகாரிகள் மற்றும் பட்டம் பெற்ற வெளிநாட்டு பயிலிலவல்களுடன் உரையாடலை மேற்கொண்டார். மேஜர் ஜெனரல் டி.பீ வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் மகன் அந்த இரு இலங்கை பயிலிலவல் அதிகாரிகளில் ஒருவராவார்.
வண்ணமயமான அணிவகுப்பின் போது, அன்றைய பிரதம அதிதியும், அணிவகுப்புத் தளபதியும் இணைந்து அதனைப் பரிசீலனை செய்து சிறப்பு மேடையில் இருந்து மரியாதையைப் பெற்றனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, பிரதம அதிதி 148 வது பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியின் நீண்ட பாடநெறியின் சிரேஷ்ட அதிகாரி முஹம்மது அப்துர் ரஹ்மான் அவானுக்கு மரியாதைக்குரிய வாளை வழங்கினார், 148 வது பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் நீண்ட பாடநெறியின் படையலகின் சிரேஷ்ட அதிகாரி முஹம்மது ஹம்சா காலிட்க்கு ஜனாதிபதி தங்கப் பதக்கத்தை வழங்கப்பட்டது. நேபாளத்தில் இருந்து 148வது பகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் நீண்ட கால பாடநெறியின் சிரேஷ்ட படையலகு அதிகாரி ஸ்ரீஜன் பனியாவுக்கு வெளிநாட்டு கூட்டுத் தலைவர் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதேபோல், 67 வது ஒருங்கிணைந்த பாடநெறி கீழ் அதிகாரி முஹம்மது நஜாம் ஆஸம் மற்றும் 22 வது பெண் பயிலிலளவல் அதிகாரி பாடநெறி கீழ் அதிகாரி பரீஹா கைனாத் ஆரிப் ஆகியோருக்கு தளபதி கோல்கள் வழங்கப்பட்டன. 35வது தொழிநுட்ப பட்டதாரிகள் பாடநெறியின் வழங்கல் மாஸ்டர் சார்ஜன்ட் பராசட் டூபிக் முதல் பதவி நிலைப் பிரதானி கோலினை பெற்றுக்கொண்டார்.
இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் இராணுவ தொடர்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டி.பி வெலகெதர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நன்றி - www.army.lk