பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
நவம்பர் 06, 2023- தெதுரு ஓயாவிற்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (நவம்பர் 6) காலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில், பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அனுராதபுரத்தில் 146.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பதுளை, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு நிலை 2 (அம்பர்) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது, அதே நேரத்தில் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு 1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெதுரு ஓயா ஆற்றுப் படுகையின் மேல் நீரோடை / நடுப்பகுதி / கீழ் நீரோடை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து 17,000 கனஅடி/வினாடி நீர் வெளியேற்றப்படுவதால் நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறு வெல்ல அபாயம் ஏட்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பிரதேசங்களில் வசிப்பவர்களும் பயணிப்பவர்களும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.