ஊடக வெளியீடு

நவம்பர் 07, 2023

சிவில் பாதுகாப்பு படையினர் தமது கடமைகளுக்கு புறம்பான வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பு, பயிர்ச்செய்கை, யானை வேலிகள் அமைத்தல் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் கடமையாற்றுவதற்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு படையினர் தமது உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு புறம்பாக வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்களா என்பது தொடர்பில் ஆராய்ந்து விஷேட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரொஷான் பியன்விலவுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மேலும் இவ்வாறு நிறுவனங்களுக்கு இணைக்கப்படுபவர்கள் தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்கள் மற்றும் வழிகாட்டல்களை காலத்துக்கு தேவையான அடிப்படையில் மீள்பரிசீலனை செய்து புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.