'பாதுகாப்பு மூலோபாயத்திற்கு தேவையான அறிவு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான தொடர் முயற்சிகள் நம் அனைவரின் முக்கிய பொறுப்பாகும்' - பாதுகாப்பு செயலாளர்

நவம்பர் 13, 2023

தற்போது மற்றும் எதிர்காலத்தில் எழக்கூடிய எந்தவொரு சவால்மிக்க மோதலையும் எதிர்கொள்ள நமது ஆயுதப் படைகள் நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

இன்று (நவம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (CMETSL) அங்கத்துவ சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு  உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(CMETSL) நிறுவனமானது ஜெனரல் குணரத்னவின் சிந்தனையில் உருவாக்கப்பட்டு முப்படைகளுக்கு இடையே தொழில்சார் ஒத்துழைப்பானது இந்நிறுவனத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில், முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இலங்கை இராணுவ பொறியியல் மற்றும் தொழிநுட்பக் கல்லூரிக்கான அங்கத்துவச் சான்றிதழையும் அடையாள அட்டையையும் பாதுகாப்புச் செயலாளரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, இலங்கை கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, CMETSL இன் தலைவர் ரியர் அட்மிரல் கலாநிதி ரவி ரணசிங்க, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார மற்றும் CMETSL இன் ஆலோசகர்  ஜெனரல் ரேணுகா ரோவல் (ஓய்வு) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.