இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரான்ஸ் தூதுவர்
மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேச்சு
நவம்பர் 15, 2023
பிரான்ஸ் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார்.
கொழும்பிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 15) இந்த சந்திப்பு இடம்பெற்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவர் பேக்டெட் அவர்கள் இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள், குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் உயர் அனர்த்த முகாமைத்துவ மீட்பு ஆகிய துறைகளில் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பிரான்ஸ், இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிக்கு நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது பிரான்ஸ் தூதரகத்தின் பிரதித் தூதுவர் திருமதி. மேரி-நோயல் டூரிஸ் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு பொறுப்பான இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு அதிகாரி கொமாண்டர் ஜீன்-பாப்டிஸ்ட் ட்ரூச் ஆகியோரும் கலந்துகொண்டனர்.