கிழக்கு இளைஞர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி பயிற்சி
நவம்பர் 21, 2023மட்டக்களப்பு ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கான 'சிங்கள மொழி' டிப்ளோமா சான்றிதல் வழங்கும் நிகழ்வில் மட்டகளப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் தலைவரின் அழைப்பின் பேரில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சிங்களம் மற்றும் தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் சிறந்த புரிந்துணர்வு, நல்லிணக்கம், நல்லெண்ணம், சகவாழ்வு மற்றும் ஒற்றுமை மேம்படுத்துவதற்கு உதவுவதற்காக பிரதேசத்திலுள்ள தமிழ் பேசும் இளைஞர்களின் நலனுக்காக மட்டகளப்பு மாவட்ட பிரஜைகள் சபை இந்த இலவச சிங்கள மொழி கற்பித்தல் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
டிப்ளோமா பாடநெறியை ஆர்வத்துடன் கற்ற மொத்தம் 290 தமிழ் பேசும் இளைஞர்கள் அன்றைய பிரதம அதிதியான கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களிடமிருந்து திறமைக்கான சான்றிதழைப் பெற்றுகொண்டனர்.
அதேபோன்று, தமிழ் கற்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தமிழ் மொழி அறிவை வழங்கும் நோக்கத்துடன் சிங்கபுர மகா வித்தியாலயம் மற்றும் நெலும்வெவ மகா வித்தியாலயத்தில் சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடநெறிகளை கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன்போது உரையாற்றிய கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும் மொழியை கற்றுகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கிழக்கு - பாதுகாப்புப் படை தலைமையகம் தனது முன்னோடித் தமிழ் கற்பித்தல் திட்டத்தை ஒரு வாரத்திற்குள் தொடங்கும் என்றும் அவர் கூறினார். இந்த சமூகப் பிரச்சினைக்கு சரியான நேரத்தில் தீர்வுகாண முனைந்த மட்டகளப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, பணி நிலை அதிகாரிகள்,சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவின் கட்டளை அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், கல்குடா அல்-கிம்மாஹ் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாரூன் சாஹ்வி, ஓட்டமாவடி அகீல் சர்வதேச உதவிப் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஏ.சி.எம் நியாஸ்தீன், ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஷாக், ஓட்டமாவடி - பாத்திமாபாலிகா மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.அபுல். ஹசன், மற்றும் பல அழைப்பாளர்கள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நன்றி- www.army.lk