9 வது மித்ர சக்தி பயிற்சி புனேவில் ஆரம்பம்
நவம்பர் 30, 2023இந்திய இராணுவத்தின் 120 படையினர், இலங்கை இராணுவத்தின் 123 படையினர், இந்திய விமானப்படையின் 15 படையினர், இலங்கை விமானப்படையின் 05 படையினர் இணைந்த கூட்டு இராணுவப் பயிற்சியான 9வது 'மித்ர சக்தி-2023' புனேவில் உள்ள அவுந்த் நகரில் வியாழக்கிழமை (நவம்பர் 16) ஆரம்பமானது.
53வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஜி.பீ.எஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, இந்தியாவின் 330வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ் தலுஜா ஆகியோர் இந்த ஆரம்ப விழாவில் கலந்து கொண்டனர்.
ஐ.நா சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ் துணை மரபுவழி செயல்பாடுகளை கூட்டாக ஒத்திகை பார்ப்பதும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது கூட்டு ஒருங்கிணைப்பை உருவாக்குதலுமே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
பயிற்சியின் போது இரு ஆயுதப் படைகளும் சோதனை, தேடுதல் மற்றும் பணி விளக்கம், ஹெலிபோர்ன் நடவடிக்கைகள் போன்ற தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொள்வர். இராணுவ தற்காப்பு கலைகள், போர் துப்பாக்கி சுடுதல் மற்றும் யோகா பயிற்சி என்பனவும் இதில் உள்ளடங்கும்.
நன்றி - www.army.lk