இலங்கை உயர் மட்டத்தை நோக்கிய நம்பிக்கையான பயணத்தில் உள்ளது - பாதுகாப்பு செயலாளர்
டிசம்பர் 11, 2023இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் எமது ஆயுதப் படைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. இந்த நாட்டின் வரலாற்றில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக நீடித்த கொடூரமான பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டத்தில், வெற்றிகரமான இராணுவத் தலைமைகளிலும் சில சமயங்களில் போர்க்களத்தில் பலவீனமான சூழ்நிலைகளிலும் பல அனுபவங்களை பெற்றுள்ளோம்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன இன்று (டிசம்பர் 11) சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் மாணவர் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாதுகாப்புக் கல்லூரியின் மாணவர் அதிகாரிகளுடன் உரையாற்ற வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ வரவேற்றார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 17வது கற்கைக்கான பட்டமளிப்பு விழா 2023, டிசம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது
அதன் பின்னர், ஜெனரல் குணரத்ன தனது பெறுமதியான அறிவையும் அனுபவத்தையும் ஒரு வருடம் முழுவதும் வெற்றிகரமாக பயின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆயுதப்படைகளின் இளம் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
பாதுகாப்புச் செயலாளரின் வருகையைக் குறிக்கும் வகையில் ஜெனரல் குணரத்னவுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க உட்பட பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கல்வியாளர்களும் கலந்துகொண்டனர்.