சீரற்ற காலநிலை தொடரக்கூடும்
டிசம்பர் 18, 2023வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வளிமண்டலவியல் திணைக்களத்தி இன்று (டிசம்பர் 18) வெளியிடப்பட்ட வானிலை அறிக்கைக்கமைய நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.
கடந்த 24 மணித்தியாலங்களில் காலி மாவட்டத்தின் ஹினிதும பிரதேசத்தில் 100mm மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பிரதேசங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், மாத்தளை, நுவரெலியா, குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களில் சில இடங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இராணுவம் மற்றும் கடற்படை நிவாரணக் குழுக்கள் உதவிகளை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.