சிங்க படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி ‘ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் - 2023’ல் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள்

டிசம்பர் 20, 2023

இலங்கை சிங்க படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II எஸ்.எஸ் பிரதீப் மலேசியாவில் டிசம்பர் 10 - 18 திகதிகளில் அண்மையில் நடைபெற்ற ‘ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2023’ போட்டியில் 3 வெள்ளிப் பதக்கங்களையும் 1 வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

கசகஸ்தான், ஈரான், இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.

59 வயதிற்குட்பட்ட எடைப் பிரிவில், அதிகாரவாணையற்ற அதிகாரி எஸ் எஸ் பிரதீப் ஸ்கொட், பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட்லிப்ட் முறைகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். அதே 59 எடைப் பிரிவில், ஸ்கொட் முறையில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

நன்றி - www.army.lk