இலங்கை கடற்படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட என்95 முகக்கவச கதிர்வீச்சு இயந்திரம்

டிசம்பர் 20, 2020

இலங்கை கடற்படையின் தொழிநுட்ப நிபுணத்துவத்தின் மூலம் என்95 முகக்கவச கதிரியக்க  இயந்திரம் ஒன்று கடற்படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிடம் இம்மாதம் 16 ஆம் திகதி தென் பிராந்திய கடபடை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் கையளிக்கப்பட்டதாக  என கடற்படை தெரிவித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பேராசிரியர் அஜித் மலலசேகரவின் வழிகாட்டலுடன் பயன்படுத்தப்பட்ட என்95 முகமூடிகளை மீண்டும் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சி கருத்திட்டத்தில் ஒரு பங்காளராக செயற்பட்டிருந்தது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் குழு உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு, மருத்துவ நிறுவனங்களின் நுண்ணுயிரியல் நிபுணர்கள் மற்றும் வைரஸ் நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமைவாக  நலன்விரும்பிகளிடமிருந்து மா நகர ரோட்டரி கிளப்பின் மூலம் திரட்டப்பட்ட நிதியினைக் கொண்டு, ஹைட்ரஜன் பெராக்ஸைட் ஆவி மற்றும் உயர் வைரஸ் தொற்று நீக்கல்  / உலர் வெப்பம் (70 பாகை செல்சியஸ்) இன் தொற்று நீக்க ல் முறைகள் அடிப்படையில் மாதிரி இயந்திரத்தை  தயாரிக்கும் செயற்பாடு  தெற்கு பிராந்திய பொறியியல் பிரிவு  கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, அத்தகைய இயந்திரங்களை  இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நியச் செலாவணியை சேமிக்கும் வகையில் கடற்படையிரினால் இந்த உபகரண தொகுதியை உருவாக்கும் பணிக்கு  கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்னவினால் அனுமதியளிக்கப்பட்டது.

மேலும், இந்த இயந்திரம், பயன்படுத்தப்பட்ட என்95 முகக்கவசங்களை  மீண்டும் பயன்படுத்ததத்தக்க வகையில் சுத்திகரிக்கும் இயல்புடையதாகையால் பாவனையின் பின் என் 95 முகக்கவசங்களின் மூலம் சுற்றுச்சூழலில் சேர்க்கபடும்  கழிவுகளை  குறைக்க வழிவகுக்கும்.

மேலும், கடற்படையினரால் வடிவமைக்கப்பட்ட முதலாவது என் 95 முகக்கவச கதிர்வீச்சு அலகு  கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், வைத்தியர் ஹர்ஷனி உபேசேகர, மருத்துவ ஊழியர்கள், திட்டத்தின் கடற்படை பொறியியல் தொழில்நுட்ப குழு தலைவர் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையாகத்தின்  சிரேஷ்ட அதிகாரிகள் குழு ஆகியோர் கலந்து கொண்டனர்.