வடக்கிலுள்ள பாடசாலைகள் இலங்கை விமானப்படையின் 'நட்பின் சிறகுகள்' நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் புனரமைப்பு
ஜனவரி 08, 2024இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமூக நலப் பணியாக மேற்கொள்ளப்படும் பாடசாலை புனரமைப்புத் திட்டத்தின் கீழ், காங்கேசன்துறை மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தின் புதிய பிரதான மண்டபக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் (ஜன. 6) பாடசாலையில் இடம்பெற்றது.
'நட்பின் சிறகுகள்' எனப்படும் இந்த சமூக வலுவூட்டல் நடவடிக்கையின் கீழ், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட 73 பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சாள்ஸ், இலங்கை விமானப்படையின் பணிப்பாளர் நாயகம் (வானூர்தி பொறியியலாளர்) எயார் வைஸ் மார்ஷல் முதித மஹவத்தகே, வடமாகாண அரச அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.