கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை
இளங்கலை பாடநெறிகளுக்கு பதிவு செய்துள்ளது
ஜனவரி 08, 2024
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2023/2024 கல்வியாண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பு திட்டங்களுக்கு வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தகுதிகளை பெற்ற மாணவர்களை பதிவு செய்துள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் துணைவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார அவர்கள் தலைமையில் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு (ஜனவரி 03) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
பூட்டான், மாலத்தீவு, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, ஓமன், குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நிகழ்வின் போது பதிவு செய்யப்பட்டதாக பாதுகாப்பு பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்வில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
2012ஆம் ஆண்டு முதல் 481 வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தகுதிகளைக் கொண்ட மாணவர்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ளனர். தற்போது 275 மாணவர்கள் அந்தந்த பட்டப்படிப்பைப் பின்பற்றுகிறார்கள் என பல்கலைக்கழகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.