பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்
ஜனவரி 14, 2024உலகப் பொருளாதார மன்றத்தின் 54ஆவது வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று (ஜனவரி 13) சுவிட்சர்லாந்துக்கு பன்னிரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைவாக, இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (ஜனவரி 14) முதல் அமுலுக்கு வரும் வகையில் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.