96வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்
ஜனவரி 18, 2024நேற்று (ஜனவரி 17) கொழும்பு ரோயல் கல்லூரியின் MAS அரங்கில் நடைபெற்ற 96வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
2023ஆம் ஆண்டின் மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரராக இலங்கை பொலிஸ் வீரர் உமயங்க மிஹிரன் தெரிவு செய்யப்பட்டார். 96ஆவது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 23 தங்கப் பதக்கங்களுடன் இலங்கை இராணுவ குத்துச்சண்டைக் கழகம் 2023ஆம் ஆண்டின் வெற்றிகரமான கழகமாகப் பாராட்டுகளைப் பெற்றது.
இந்த நிகழ்வில் போது போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பாதுகாப்பு செயலாளர் மற்றும் BASL இன் தலைவர் டயான் கோமஸ் அவர்களால் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவ மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தேசிய குத்துச்சண்டைக் குழுவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இலங்கை குத்துச்சண்டை சங்கம் (BASL), தேசிய தேர்வுக் குழுவுடன் இணைந்து, ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான 1வது மற்றும் 2வது உலக தகுதிச் சுற்றுப் போட்டிகளையும் இலக்காகக் கொண்டு தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.
இம்முறை ஜனவரி 13 முதல் 17 வரை ஐந்து (5) நாட்கள் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் பிரதிநிதிகள் உட்பட 20 கழகங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 150 குத்துச்சண்டை வீரர்கள் பங்குபற்றலுடன் இச்சம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது