இலங்கையில் தேசிய பாதுகாப்பு பற்றிய முதன்மையான சிந்தனைக் குழுவாக, INSS அறிவுசார் ஆய்வுகளின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. - பாதுகாப்பு செயலாளர்
ஜனவரி 19, 2024“தேசியப் பாதுகாப்புத் துறையில், அறிவு என்பது அதிகாரம் மட்டுமல்ல; இது நமது பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் அடித்தளமாக உள்ளது" என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று பத்தரமுல்லையில் உள்ள தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தில் (INSS) நடைபெற்ற 'பாதுகாப்பு மீளாய்வு-2023' வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார். (ஜனவரி 19).
INSS வேலைபார்க்கும் பணிப்பாளர் நாயகம் மற்றும் பதில் பணிப்பாளர் (ஆராய்ச்சி) கர்னல் நலின் ஹேரத் அவர்கள் நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதியான பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் குணரத்ன அவர்களை அன்புடன் வரவேற்றதுடன் நிகழ்ச்சியின் வரவேற்பு உரையையும் நிகழ்த்தினார்.
'பாதுகாப்பு மீளாய்வு-2023'அறிவார்ந்த கட்டுரைகளின் வருடாந்திர வெளியீடு ஆகும். இந்த சர்வதேச இதழின் நோக்கம் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்கு முன்னுரிமையுடன் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு தளம் அமைத்துக் கொடுப்பதாகும்.
இச்சஞ்சிகை 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்விதழ் இத்தொடரின் ஆறாவது சஞ்சிகை ஆகும். மேலும் இதில் தேசிய பாதுகாப்பு தொடர்பான நான்கு ஆவண கட்டுரைகள் உள்ளடங்கியுள்ளன.
INSS இன் ஆசிரியர் குழுவின் செயலாளரான திருமதி சரணி படபெண்டிகேயின் "தேசிய பாதுகாப்பைப் பாதுகாத்தல்: ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக அதிகாரமளித்தல்" என்ற கட்டுரை, விங் கமாண்டர் கயான் கஹந்தவாலராச்சி (ஓய்வு) மற்றும் DSSV சூரியாராச்சி ஆகியோரால் எழுதப்பட்ட "இராணுவப் படைகளில் தகவல்-தொழில்நுட்பம்-இயக்கப்பட்ட அமைப்புகளின் எதிர்காலம் மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான அவற்றின் தாக்கங்கள்: இலங்கை விமானப்படையின் ஒரு வழக்கு ஆய்வு" என்ற கட்டுரை, இந்தீவாரி கலகமவால் எழுதப்பட்ட "இலங்கையில் நிலையான சமாதானம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான சமூகப் பொருளாதார காரணிகள்: ஒரு விரிவான பகுப்பாய்வு" என்ற கட்டுரை, மற்றும் சுபாசனி ஆரியவர்தனவின் "இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு கடல்சார் நுழைவாயிலாக இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் (IOR): தாக்கங்கள் " என்ற நான்கு கட்டுரைகள் இவ்விதழில் உள்ளடங்கியுள்ளது.
இந்நிகழ்வில் போது சஞ்சிகை ஆசிரியர் குழு உறுப்பினர்களான பேராசிரியர் சமிந்த பத்மகுமார, ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி (ஓய்வு) மற்றும் பேராசிரியர் சந்திரா எம்புல்தெனிய. சக மீளாய்வு குழுவின் உறுப்பினர்கள் எயார் வைஸ் மார்ஷல் டில்ஷான் வசகே (ஓய்வு), பிரதி பொலிஸ்மா அதிபர் யு.கே மரம்பகே, திருமதி சமிந்திரி சபரமாது, லெப்டினன்ட் கேணல் எம்.ஏ.டி.எஸ் முத்துகல மற்றும் லெப்டினன்ட் கேணல் துஷார கத்ரியாராச்சி (ஓய்வு) சமூகமளித்திருந்தனர்.