கலேவெல பொது மைதானம் இராணுவத்தினரால் மாற்றியமைப்பு
ஜனவரி 23, 2024கலேவெலயில் புனரமைக்கப்பட்ட பொது விளையாட்டு மைதானம் 21 ஜனவரி 2024 ம் திகதியன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜானக பண்டார தென்னகோன், மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொது மைதானத்தை புனரமைப்பதற்கான திட்டத்தை கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களினால் இராணுவ தளபதிக்கு விடுத்த வழிக்காட்டலுக்கு அமைவாக பிரதம கள பொறியியலாளர் மேஜர் ஜெனரல் எஸ்எ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர்களின் மேற்பார்வையில் 4 வது (தொ) இலங்கை பொறியியல் படையணி மற்றும் 7 வது இலங்கை பொறியியல் பிரிகேட் படையினர் தொழில்நுட்பம், இயந்திரவியல் மற்றும் பணியாளர் நிபுணத்துவம் என்பவற்றைக் கொண்டு மேற்கொண்டனர். அனார்த முகாமைத்துவ திணைக்களம் திட்டத்திற்கான நிதியுதவியினை வழங்கியது.
பதில் பாதுகாப்பு அமைச்சர், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் இணைந்து புனரமைக்கப்பட்ட மைதானத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
திட்டமிடப்பட்ட கால எல்லைக்குள் முடிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவத் தளபதி மற்றும் படையினருக்கு பதில் பாதுகாப்பு அமைச்சர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். இயற்கை பேரழிவுகளின் போது பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்பான ஒன்றுகூம் நிலைமாக புனரமைக்கப்பட்ட மைதானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார்.
பின்னர், குறித்த மைதானத்தின் அழகிற்காகவும் ஞாபக சின்னமாகவும் நிறுவப்பட்ட சேவையிலிருந்து ஒதுக்கப்பட்ட கவச வாகனம் மற்றும் எம்வீ4 ரக கண்ணிவெடி அகற்றும் வாகனங்களை இராணுவத் தளபதி திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்கள், பிரதேசத்தைச் அரச அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நன்றி - www.army.lk