தென் சூடான் 9வது இலங்கை பாதுகாப்பு குழு நாடு திரும்பல்
பெப்ரவரி 06, 2024தென் சூடான் நிலை - 02 மருத்துவமனையில் தங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள 9வது இலங்கைப் மருத்துவக் குழுவின் 09 அதிகாரிகள் மற்றும் 43 படையினர் (பெப்ரவரி 05) காலை நாடு திரும்பினர்.
இடீ 8606 ஐ.நா எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக இன்று (05) காலை 6.50 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதன்போது இலங்கை இராணுவ வைத்திய படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஏசீ பெர்னாண்டோ யூஎஸ்பீ மற்றும் இராணுவ வைத்திய சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, இராணுவ வைத்திய படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் டபிள்யூஎயூஎஸ் வனசேகர ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் அவர்கள் வரவேற்கப்பட்னர்.
கேணல் எம்பிஎஸ்ஆர் அமரசேகர யுஎஸ்பீ மற்றும் 2ம் கட்டளை அதிகாரி மேஜர் ஜேஏடிசிஎச் ஜயசிங்க தலைமையில் 17 அதிகாரிகள் மற்றும் 49 படையினர் உட்பட 66 வீரர்கள் அடங்கிய 9 வது மருத்துவ குழு, 2 பெப்ரவரி 2023 அன்று தென சூடானுக்கு சென்றதுடன், தென் சூடான் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உள்ள நிலை 02 மருத்துவமனையில் சேவையாற்றினர்.
தென் சூடான் ஐ.நா பணியில் சேவையாற்றும் 9வது இலங்கை மருத்துவக் குழுவின் ஏனையவர்கள், 10வது குழு பெப்ரவரி 6 ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் விரைவில் நாடு திரும்புவர்.
நன்றி - www.army.lk