கிளிநொச்சி பாடசாலை மானவர்களுக்கு இராணுவத்தினர் உதவி

பெப்ரவரி 07, 2024

இலங்கை இராணுவத்தினரின் சமூக சேவை செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மாணவர்களுக்கு தேவையான காலணிகள் உள்ளிட்டவை அண்மையில் வழங்கப்பட்டன.

இதற்கேற்ப, 2வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் படையினரால் கிளிநொச்சி ஜயபுரம் கலவன் பாடசாலையில் நன்கொடை வழங்கும் நிகழ்வு (ஜனவரி 20) முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது கிளிநொச்சி ஜயபுரம் கலவன் பாடசாலையின் 60 மாணவர்களுக்கும் 55வது காலாட் படைப்பிரிவின் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களின் 40 பிள்ளைகளுக்கும் காலணிகள் பரிசாக வழங்கப்பட்டதாக இராணுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 4வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் படையினரால் அனுசரணையாளரின் உதவியின் மூலம் அனுராதபுரத்திலுள்ள சிங்கிதி அருணலு பாலர் பாடசாலையின் வறிய மாணவர்களுக்கு அத்தியாவசியப் பாடசாலை உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.