பாடசாலை மானவர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த கடற்படையினர் உதவி
பெப்ரவரி 07, 2024இலங்கை கடற்படையினரின் சமூக சேவை செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, மதவாச்சி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
இதற்கேற்ப, துலாவெல்லிய வித்தியாலயம், புலேலிய வித்தியாலயம் மற்றும் ரம்பேவ கினிகடுவெவ வித்தியாலயம் ஆகியவற்றின் சுகாதார வசதிகள் கடற்படையினரின் மனிதவள உதவியைக் கொண்டு அபிவிருத்தி செய்யப்பட்டு திங்கள்கிழமை (பெப்.05) மாணவர்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் வடமத்திய கடற்படை கட்டளை சிவில் பொறியியல் திணைக்களத்தினால் பிரதேச கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நளீன் நவரத்ன அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது. பரோபகாரர்களின் அனுசரணையுடன் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் வடமத்திய கடற்படை கட்டளை சிவில் பொறியியல் திணைக்களத்தினால் பிரதேச கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நளீன் நவரத்ன அவர்களின் மேற்பார்வையிலும், நன்கொடையாளர்களின் நிதியுதவியுடனும் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.