இராணுவத்தின் பிரதம அதிகாரி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்
பெப்ரவரி 07, 2024இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஹரீந்திர பீரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (பெப்ரவரி 07) அமைச்சு அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் மேஜர் ஜெனரல் பீரிஸ் உடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதுடன், அவரின் புதிய நியமனம் தொடர்பில் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் 63வது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் பீரிஸ் அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.