இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஈரானிய கடற்படைக் கப்பலான ‘ஐஆர்ஐஎன்எஸ் ரோன்ப்’க்கு விஜயம்

பெப்ரவரி 18, 2024

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, சனிக்கிழமை (பெப். 17) ஈரானிய கடற்படைக் கப்பல் (ஐஆர்ஐஎன்எஸ்) ‘ரோன்ப்’க்கு விஜயம் செய்தார்.

‘ஐஆர்ஐஎன்எஸ் ரோன்ப்’ மற்றும் புஷேஹர் ஆகிய இரு கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை (பெப்.16) இலங்கை வந்தடைந்தன.

கப்பலுக்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் முகமது ஹாஜி ஜாதே வரவேற்றார். இந்நிகழ்வில் இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு கலாநிதி அலிரெசா டெல்கொஷ் அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், கடற்படைத் தளபதி, உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.