இலங்கை ஆயுதப்படைகள் சர்வதேச இராணுவ பேரவை ஓட்டத்துடன்
உலக இராணுவ தின கொண்டாட்டம்

பெப்ரவரி 19, 2024

சர்வதேச இராணுவ தினத்தினை முன்னிட்டு 2024 பெப்ரவரி 18 ஆம் திகதி சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டப்போட்டியில் 300 க்கும் மேற்பட்ட முப்படை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி எம்பில் அவர்களின் தலைமையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் மற்றும் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் பத்தரமுல்லை பாராளுமன்ற மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமானது.

இந்த ஆண்டுக்கான சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவை ஓட்டபோட்டி கிட்டத்தட்ட 2.5 கி.மீ தூரத்தை கடந்து இராணுவத் தலைமையக பிரதான நுழைவாயிலில் முடிவடைந்தது. இலங்கை ஆயுதப்படைகளின் விளையாட்டு திறமையை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்தும் விதமாக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையிலிருந்தும் அன்னலவாக நூறு பங்கேற்பாளர்கள், அந்தந்த முப்படைத் தளபதிகளின் தலைமையில், இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தநிகழ்வில் பிரதம அதிதி மற்றும் முப்படைத் தளபதிகள் பங்குபற்றியதோடு பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் தொலைநோக்கு வீரர்கள் இடையே ஒற்றுமையை ஊக்குவிகப்படுவதுடன், இராணுவ வீரர்களுக்கு விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உலகளாவிய தளமாக செயல்படுகிறது, இதன் மூலம் உலகளவில் ஆயுதப்படைகள் முழுவதும் உடல் தகுதி, இராணுவ தயார்நிலை மற்றும் கல்வியை மேம்படுத்துகிறது.

நன்றி - www.army.lk