உலகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது' - பாதுகாப்புச் செயலாளர்
பெப்ரவரி 27, 2024உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவதில் இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு (OPCW) ஆற்றிய பங்கைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கமும் நாமும் நமது துணை நிறுவனங்களின் அர்ப்பணிப்பு குறித்து பெருமை கொள்கிறோம்.
இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு மற்றும் இரசாயன ஆயுதங்களை நடைமுறைப்படுத்தும் தேசிய அதிகாரசபை என்பன இணைந்து கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இன்று (பெப்.27) ஏற்பாடு செய்திருந்த நிபுணர் செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"உங்கள் செவைப்பெருனர்களை அறிந்துகொள்வதற்கான நடைமுறை வழிகாட்டுதல்களை உருவாக்குதல் (KYC) மற்றும் இரசாயன விநியோகச் தொடருக்கான சரியான விடாமுயற்சி சிறந்த நடைமுறைகள்" ஆகியவற்றை மையமாகக் கொண்ட இம்மாநாடானது பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 01ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில், மேற்படி அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கான அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, கனடா, பிரேசில், மெக்சிகோ, சீனா, இந்தியா, கென்யா, நைஜீரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு (OPCW) இரசாயன ஆயுதங்கள் மாநாட்டை செயல்படுத்தும் முக்கிய அமைப்பாகும், இது இரசாயன ஆயுதங்களின் வளர்ச்சி, உற்பத்தி, இருப்பு மற்றும் பயன்பாடு மற்றும் அவற்றின் அழிவைத் தடை செய்வது ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது. இந்த மாநாடு சர்வதேச அளவில் செயல்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும், இது சில வகையான பேரழிவு ஆயுதங்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் தேசிய அளவில் செயல்படுத்தப்பட்ட இரசாயன பயங்கரவாத தடுப்பு திட்டங்கள் மற்றும் இரசாயன பயங்கரவாதத்தின் நிகழ்வை பாதிக்கக்கூடிய காரணிகள் மீது கவனம் செலுத்துகிறது.
இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு இணையாக, இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான சர்வதேச அமைப்பு மற்றும் பிற அமைப்புக்களுடன் ஒருங்கிணைக்க இலங்கை இரசாயன ஆயுத மாநாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகார சபையை நிறுவியது. இலங்கை இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையில் 1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி கையெழுத்திட்டது. மேலும், 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி ஒப்புதல் அளித்தது. இலங்கையில் இந்த மாநாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக 2007ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க இரசாயன ஆயுதங்கள் மாநாட்டுச் சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியது.மேலும் 2019 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கை திருத்தச் சட்டமாக திருத்தப்பட்டது.
இம்மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் (பாதுகாப்பு சேவைகள்) திரு.ஜயந்த எதிரிசிங்க, இரசாயன ஆயுத மாநாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் (பொறியியல்) ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க, இரசாயன பாதுகாப்பு, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் உயர் ஆயுதங்கள் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி. ரொஹான் பி பெரேரா மற்றும் இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் சிரேஷ்ட திட்ட அதிகாரி திரு. தாவோன் கிம் மற்றும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.